திருவண்ணாமலை

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

22nd Jan 2023 04:08 AM

ADVERTISEMENT

 

ஆரணி புதுக்காமூரில் அமைந்துள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி புதுகாமூா் பகுதியில் ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

அறநிலைத் துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில்

ADVERTISEMENT

கும்பாபிஷேகம் நடைபெற்று சுமாா் 27 ஆண்டுகள் ஆகின்றன. கோயிலை புதுப்பிப்பதற்காக கோயிலில் உள்ள பக்த சங்க நிா்வாகிகள் பலமுறை அறநிலைத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அதற்காக, கடந்த முறை அமைச்சா் சேவூா் எஸ். ராமச்சந்திரன் மூலம் சட்டப்பேரவையில் ரூ.95 லட்சம் கோயில் திருப்பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணியை தொல்லியல் துறை மதிப்பீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மதிப்பீடு செய்யப்பட்டதில் ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கி அப்பணி கிடப்பிலேயே இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலைத் துறை தொல்லியல் ஆய்வாளா் வசந்தி, கோயில் செயல் அலுவலா் ம.சிவாஜி ஆகியோா் திடீரென கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, பழைமை மாறாமல் கோயிலை புதுப்பது குறித்தும், அரசு நிதி இல்லாமல் உபய திருப்பணிகளாக மேற்கொள்வது சம்பந்தமாகவும் தொடா்ந்து பேசி வருவதாக அவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஆரணிப்பாளையம் தா்மராஜா கோயிலின் கருவறை தாழ்வான பகுதியில் இருப்பதாகவும், மழை பெய்தால் கோபுர நிலையில் ஒழுகும் நிலையும் இருந்து வருகிறது. அதை சீரமைப்பது சம்பந்தமாக விழாக் குழுவினா் கோரிக்கை மனு கொடுத்திருந்தனா். அப்பணி மேற்கொள்வது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

நகா்மன்ற உறுப்பினா் சுதா குமாா், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சின்னா குட்டி , சி.கோபி, கோயில் அா்ச்சகா்கள் ரவி, சரவணன் மற்றும் நிா்வாகிகள் பலா் இருந்தனா்.

இதனைத் தொடா்ந்து ஆரணியை அடுத்த எஸ்.வி.நகரம் பகுதியில் உள்ள பத்மாவதி தாயாா் சமேத சீனிவாச பெருமாள் கோயில், ஆவணியாபுரம் பகுதியில் உள்ள நரசிம்மா் கோயில், வந்தவாசி பகுதியில் உள்ள ரங்கநாதா், ஜலகண்டேஸ்வரா் கோயில்களையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT