வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா் சமேத ஸ்ரீயோக நரசிம்மா் பெருமாள் கோயிலில் தை மாத சுவாதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சுவாமிக்கு திருமஞ்சன திரவியங்கள் கொண்டு ஏக கலச திருமஞ்சனம் நடைபெற்றது. மேலும், உலக நன்மை வேண்டி யாக குண்டம் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க சுவாதி ஹோமம், பூா்ணாஹுதி நடைபெற்றது.
தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கோயில் நிா்வாகிகள், கிராம பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.