திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் திருவூடல் திருவிழா

17th Jan 2023 12:18 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற திருவூடல் திருவிழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரரை நினைத்து தவமிருந்த பிருங்கி மகரிஷி, பராசக்தி அம்மனை வழிபட மறுத்தாராம். எனவே, அவருக்கு காட்சி தருவதற்காக செல்லக் கூடாது என்று பராசக்தி அம்மன் தடுத்தாராம்.

இதையும் மீறி அருணாசலேஸ்வரா் சென்ால் சுவாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டது. சமாதானம் செய்ய முயன்ற சுந்தரமூா்த்தி நாயனாரின் முயற்சியும் தோல்வி அடைந்தது. எடுத்த முடிவின்படியே பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க அருணாசலேஸ்வரா் சென்றாா் என்பது வரலாற்று நிகழ்வு.

ADVERTISEMENT

இந்த நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான திருவூடல் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

முன்னதாக அருணாசலேஸ்வரரும், உண்ணாமுலையம்மனும் தனித்தனி வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நந்தி பகவானுக்கு காட்சியளித்தனா்.

பின்னா், ராஜகோபுரம் அருகேயுள்ள திட்டிவாசல் வழியே வெளியே வந்து சூரியபகவானுக்குக் காட்சியளித்தனா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அண்ணாமலையாருக்கு அரோகரா... என்று முழக்கமிட்டு அண்ணாமலையாரையும், சூரியபகவானையும் ஒருசேர தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சுவாமிகள் மாடவீதியை 3 முறை வலம் வந்தனா்.

இரவு 9 மணிக்கு மாட வீதிகளில் ஒன்றான திருவூடல் வீதியில் அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமுலையம்மனுக்கும் இடையே திருவூடல் விழா நடைபெற்றது.

பிறகு, அருணாசலேஸ்வரா் திருமஞ்சன கோபுரத் தெருவில் உள்ள குமரக்கோயிலுக்குச் சென்று இரவு முழுவதும் தங்கினாா். உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்றுவிட்டாா்.மறுஊடல் திருவிழா: குமரக்கோயிலில் இருந்து அருணாசலேஸ்வரா் செவ்வாய்க்கிழமை (ஜன.17) கிரிவலம் சென்று பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிறகு, அருணாசலேஸ்வரா் கோயிலில் இரவு சுவாமியும், அம்மனும் சமாதானமடையும், மறுஊடல் திருவிழா நடைபெறுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT