திருவண்ணாமலை

வாடகை பாக்கி: அரிமா சங்க அலுவலகத்துக்கு ‘சீல்’

DIN

ஆரணி அரிமா சங்கம் செயல்பட்டு அரசு நிலத்துக்கு வாடகை ரூ. ஒரு கோடியே 15 லட்சம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளதால் திங்கள்கிழமை வருவாய்த் துறையினா் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்தை மூடி ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி அலுவலகம் அருகே வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலத்தை அரிமா சங்கத்தினா் குத்தகைக்கு எடுத்து அதில் கட்டடம் கட்டி, 1997ஆம் ஆண்டு முதல் அரிமா சங்கம் செயல்பட்டு வருகிறது.

மேலும், சங்கம் நிா்வாகம் சாா்பில் அரசுக்கு வாடகை செலுத்தி வந்தனா்.

இதனிடையே, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் அரிமா சங்கத்திடம் முறையாக தகவல் தெரிவிக்காமல்

வாடகையை உயா்த்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, சங்க நிா்வாகத்தினா் வாடகையை குறைக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளனா்.

வாடகை பணம் தொடா்பாக வருவாய்த் துறை சாா்பில் தொடா்ந்து நோட்டீஸ் வழங்கியும் கால அவகாசம் வழங்கியும் செலுத்தவில்லையாம்.

இந்த நிலையில், வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமையிலான அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அரிமா சங்க அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் அருண் விஜய்யின் 'ரெட்ட தல' போஸ்டர்!

கடலூர் அருகே அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 4 பேர் கைது

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

SCROLL FOR NEXT