திருவண்ணாமலை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரக வேலைத் திட்ட அட்டை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாா்ச் 1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு ஊரக வேலைத் திட்ட நீலநிற வேலை அட்டை பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், அடையாள அட்டை கோரும் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக நீல நிறத்திலான வேலை அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 20,355 பேருக்கு நீல நிற வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிதாக வேலை அட்டை வழங்குவதற்கும், ஏற்கெனவே வழங்கப்பட்ட அட்டைகளை புதுப்பிக்கவும் ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

தங்கள் பகுதி ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி நீலநிற வேலை அட்டையைப் பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT