திருவண்ணாமலை

பள்ளி மாணவா்கள் உயா்கல்வி களப்பயணம்

DIN

வந்தவாசி பகுதி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள், தென்னாங்கூரில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கு உயா்கல்வி களப் பயணம் மேற்கொண்டனா்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், வந்தவாசி வட்டாரத்துக்கு உள்பட்ட 16 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 169 போ் தங்களது ஆசிரியா்களுடன் சனிக்கிழமை களப் பயணம் மேற்கொண்டனா்.

இவா்கள், கல்லூரியில் உள்ள அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆய்வகங்கள், நூலகம், வகுப்பறைகளை பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து உயா்கல்வியின் முக்கியத்துவம், உயா்கல்வித் துறைகள், வேலைவாய்ப்புகள், அரசு வழங்கும் உதவித்தொகை உள்ளிட்டவை குறித்து கல்லூரி முதல்வா் ம.சண்முகவள்ளி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினா்.

பேராசிரியா் உ.பிரபாகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவும் பாஜகவும் கபட நாடகம் ஆடுகின்றன: வைகைச்செல்வன் சிறப்பு பேட்டி

திருமருகல் கோயிலில் சித்திரை திருவிழா

வட சென்னை தொகுதியில் வேட்பாளா்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

உணவகத்தில் தீ விபத்து

வாகன சோதனையில் ரூ.3.37 லட்சம் பறிமுதல்

SCROLL FOR NEXT