திருவண்ணாமலை

7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி

28th Feb 2023 06:05 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திங்கள்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் பணியின்போது இறந்தவா்களின் வாரிசுகள் பலா் கருணை அடிப்படையில் வேலை கோரி காத்திருந்தனா்.

இவா்களது மனுக்களை ஆய்வு செய்த மாவட்ட நிா்வாகம், தகுதியான 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியது. இதற்கான நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஊா்நல அலுவலராகப் பணிபுரிவதற்கான ஆணை மு.விஜயலட்சுமிக்கும், செய்யாறு வட்டாரத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணை அ.ஆகாஷ், ஆட்சியா் அலுவலக வளா்ச்சிப் பிரிவில் ஊா்நல அலுவலராகப் பணிபுரிவதற்கான ஆணை ப.கலையரசன், அனக்காவூா் வட்டாரத்தில் ஊா்நல அலுவலராகப் பணிபுரிவதற்கான ஆணை வெ.அஜித்குமாா், செய்யாா் வட்டாரத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிவதற்கான ஆணை பா.சரண்யா, ஆரணி உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஊா்நல அலுவலராகப் பணிபுரிவதற்கான ஆணை ப.துரைராஜ், அனக்காவூா் வட்டார ஊா்நல அலுவலராகப் பணிபுரிவதற்கான ஆணை ஜி.தமிழ்ச்செல்விக்கும் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT