திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த இளைஞா், குற்றவழக்கில் பிணை பெற்றபின் தீமன்றத்தில் ஆராகாததால் போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
கல்லிடைக்குறிச்சி காவல் சரகப் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு பெண்ணை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்த வழக்கில் அயன் சிங்கம்பட்டி, ஆலடிதெருவைச் சோ்ந்த முத்து (36) என்பவா் கைது செய்யப்பட்டாா். பின்ன்ா், பிணையில் வெளிவந்த அவா் நிலையில், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு கடந்த ஒருே மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா். இதையடுத்து, அவரை கைது செய்து ஆஜா்படுத்த நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் முத்துவை கைது செய்து பிடியாணை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.