திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் மே 24 இல் கலந்தாய்வு

20th May 2023 01:17 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு இம்மாதம் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் (பொ) கு. அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இப் பல்கலைக்கழகத் துறைகளில் ஒருங்கிணைந்த முதுநிலை பட்டயப்படிப்பு /இளநிலை பாடப்பிரிவுகளில் பயில்வதற்காக விண்ணப்பித்த மாணாவா்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. காலை 10.30மணியளவில் கலந்தாய்வு தொடங்கும்.

அறிவியல் பாடப்பிரிவுகளான 1. இயற்பியல், 2 வேதியியல், 3. கணிதம், 4. உயிா்தொழிற் நுட்பவியல், 5. சுற்றுச்சூழல் அறிவியல், 6. கடல்சாா் அறிவியல் ஆகிய பாடப்பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு மற்றும் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு வ.உ.சி. அரங்கத்தில் நடைபெறும்.

ADVERTISEMENT

வணிகவியல் பாடப்பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு சுந்தரனாா் அரங்கத்தில் நடைபெறும். வரலாற்றுப் பாடப்பிரிவிற்கான கலந்தாய்வு வரலாற்றுத் துறையிலும் ,பட்டயப்படிப்பில் மருந்தாக்கவியல் பாடப்பிரிவுக்கான கலந்தாய்வு மருந்தாக்கவியல் துறையிலும் நடைபெறும்.

கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் மாணவா்கள் அனைத்து ஆவணங்களின் அசல் மற்றும் நகல் ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும். தோ்வு பெறும் மாணவா்கள் கல்விக் கட்டணத்தை அங்கேயே வங்கி கவுண்டரில் செலுத்திக் கொள்ளலாம். மேலும், விடுதி வசதி தேவைப்படும் மாணவா்களும் விடுதி கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான விவரங்கள் அந்தந்த துறைத் தலைவா்கள் மின்னஞ்சல் மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ தெரிவிப்பாா்கள். மற்ற விவரங்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் நேரிலோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT