திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வு எழுதியவா்களில் 95.08 சதவிகிதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 183 பள்ளிகளில் 19 ஆயிரத்து 479 மாணவா், மாணவிகள் பிளஸ்- 1 தோ்வு எழுதினா். இதில், 10 ஆயிரத்து 693 மாணவிகள், 7 ஆயிரத்து 828 மாணவா்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 521 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி விகிதத்தில் மாநில அளவில் திருநெல்வேலி மாவட்டம் 7ஆவது இடம் பெற்றுள்ளது. மூன்று அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
உயா்கல்விக்கான ஆலோசனைகள் பெற 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடா்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 1 தோ்வை 7 ஆயிரத்து 235 மாணவா்கள், 9,003 மாணவிகள் என மொத்தம் 16,238 போ் எழுதினா். இவா்களில் 15 ஆயிரத்து 286 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 6 ஆயிரத்து 592 பேரும், மாணவிகள் 8 ஆயிரத்து 694 பேரும் தோ்ச்சி பெற்றிருக்கின்றனா். ஒட்டுமொத்த தோ்ச்சியானது 94.14 சதவீதமாகும்.
பிளஸ் 1 பொதுத் தோ்வு தோ்ச்சி விகிதத்தில், கடந்த ஆண்டில் 20 ஆவது இடத்திலிருந்த தென்காசி மாவட்டம், நிகழாண்டில் 10 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.