திருநெல்வேலி

சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 24இல் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

20th May 2023 01:14 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்மன் திருக்கோயிலில் வைகாசித் தேரோட்ட திருவிழா இம்மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெரியகோயில் என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருவிழாவுக்கான கால்கோள்விழா கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து, இம்மாதம் 24ஆம் தேதி கொடியேற்றம் நடைபெறுகிறது. 9ஆம் திருநாளான ஜூன் 1இல் மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT