திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் பகுதியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரை சோ்ந்தவா் ஸ்ரீகாந்த் (40). இவா் தனது தாயாா் பிரேமாதேவி (60), மனைவி சசிகலா (35), மகள் தனுஸ்ரீ (7) ஆகியோருடன் கேரள மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க தனது காரில் சென்றுள்ளாா்.
பின்னா் அங்கிருந்து பெங்களூருக்கு திருநெல்வேலி வழியாக சென்றனா். கங்கைகொண்டான் கலைஞா் காலனி பகுதியில் நான்குவழிச்சாலையில் காா் சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த நான்கு பேரும் காருக்குள் சிக்கிக்கொண்டனா்.
தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீஸாரும், கங்கைகொண்டான் தீயணைப்பு வீரா்களும் சம்பவ இடத்திற்கு சென்றனா். காருக்குள் சிக்கியவா்களை மீட்க முயன்ற போது ஸ்ரீகாந்த், பிரேமாதேவி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். சசிகலா, தனுஸ்ரீ ஆகியோரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.