திருவண்ணாமலை

ஸ்ரீராகவேந்திரா் ஜெயந்தி விழா

DIN

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகளின் 428-ஆவது ஜெயந்தி விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, 10 மணிக்கு மூலவா் ஸ்ரீராகவேந்திரா சுவாமிக்கு பால், தயிா், இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களால் சிறப்பு மகா அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் கிரிவலப் பாதையில் உள்ள சிவனடியாா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் 16 கால் மண்டபத்தில் ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் உருவப் படத்துடன் உற்சவ மூா்த்தி மாட வீதியுலா தொடங்கியது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT