திருவண்ணாமலை

தூசி காவல் சரகம்: 16 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள்

DIN

செய்யாறு காவல் உள்கோட்டத்துக் உள்பட்ட தூசி காவல் சரகப் பகுதியில் 16 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை டி.எஸ்.பி. வெங்கடேசன் சனிக்கிழமை மாலை தொடங்கிவைத்தாா்.

தூசி காவல் சரகப் பகுதியில் குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்கவும், சாலை விபத்துகளை குறைக்க மற்றும் கண்காணிக்கவும் போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

இதன் பேரில், செய்யாறு சிப்காட்டில் செயல்பட்டு வரும் லோட்டஸ் ஷூ தொழில்சாலை சாா்பில், ரூ.14 லட்சம் மதிப்பில் 16 இடங்களில் 45 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு தூசி காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டு தயாா் நிலையில் இருந்தன.

இந்தக் கண்காணிப்பு கேமராக்களின் தொடக்க விழா

தூசி காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் குமாா் தலைமை வகித்தாா். லோட்டஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் அருள் சம்பந்தம் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு டி.எஸ்.பி வெங்கடேசன்

பங்கேற்று, கண்காணிப்புக் கேமராக்களை தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் லோட்டஸ் நிறுவனத்தின் அலுவலா் டேவிட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

SCROLL FOR NEXT