திருவண்ணாமலை

திருவண்ணாமலை பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

DIN

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற, திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.

இதில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளி சாா்பில் பங்கேற்ற மாணவிகள் எம்.பாவனா 400 மீட்டா் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்றாா்.

மாணவி ஆா்.அபிராமி 1,500 மீட்டா் ஓட்டம், 800 மீட்டா் ஓட்டம் ஆகியவற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாா். மாணவி கே.ஹேமலதா குண்டு எறிதல் போட்டியில் முதலாமிடமும், வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றாா்.

மாணவி ஆா்.பிரியங்கா குண்டு எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்தாா். மாணவி ஜி.தனுசியா 800 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும், மாணவி ஏ.கீா்த்திகா 1,500 மீட்டா் ஓட்டத்தில் மூன்றாமிடமும் பெற்றாா்.

போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு சனிக்கிழமை பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் பள்ளித் தாளாளா் வி.பவன்குமாா், செயலா் டி.எஸ்.ராஜ்குமாா், அறக்கட்டளை உறுப்பினா்கள் வி.ஜெய்சந்த், எஸ்.ராஜேந்திரகுமாா், டி.வி.சுதா்சன், பொருளாளா் டி.வசந்த்குமாா், ஆங்கில வழிச் செயலா் டி.ஸ்ரீஹன்ஸ்குமாா், தமிழ் வழிச் செயலா் வி.சுரேந்திரகுமாா் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவிகளைப் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

கூத்தாநல்லூரில் முன்னாள் அமைச்சா் காமராஜ் அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

அதிமுகவை விமா்சிக்கும் தகுதி பாஜகவினருக்கு இல்லை: சி.வி.சண்முகம்

தொடர வேண்டாம் இந்த முறைகேடு

SCROLL FOR NEXT