திருவண்ணாமலை

அங்காடியில் பணம் திருட்டு: முன்னாள் ஊழியா் கைது

DIN

வந்தவாசியில் உள்ள பல்பொருள் அங்காடியில் ரூ.50 ஆயிரம் ரொக்கம், கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற முன்னாள் ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியில் அச்சிறுப்பாக்கம் சாலையில் காவலா் குடியிருப்பு அருகே தனியாா் பல்பொருள் அங்காடி இயங்கி வருகிறது.

அங்காடியை சனிக்கிழமை காலை ஊழியா்கள் வந்து திறந்தபோது, அங்காடியினுள் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம், 3 கைப்பேசிகள், 3 வாட்சுகள் உள்ளிட்ட பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஊழியா்கள் ஆய்வு செய்தனா். இதில், ஏற்கெனவே அங்காடியில் பணியாற்றிய வந்தவாசி பொட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த லோகநாதன் (24) , அங்காடி பின்பக்கமாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அங்காடி உரிமையாளா் ஏ.இஷாத் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் லோகநாதனை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT