திருவண்ணாமலை

மாண்டஸ் புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று போளூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட விநியோக அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

வேளாண்மை உதவி இயக்குநா் சபீதா, வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி வேளாண்மை அலுவலா் ராமு வரவேற்றாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது படவேடு, அனந்தபுரம், சந்தவாசல் என பல்வேறு ஊராட்சிகளில் அண்மையில் மாண்டஸ் புயலால் பெரும் அளவில் வாழை மரங்கள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்டவிவசாயிகளுக்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை. உடனே வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எடப்பிறை, ஈயகொளத்தூா், களம்பூா், புலிவானந்தல், கொரால்பாக்கம், சந்தவாசல் என பல்வேறு ஊராட்சிகளில் ஏரிக் கால்வாயை ஆக்கிரமித்து ஏரி தண்ணீா் நிலத்துக்கு பாயவிடாமல் தடுப்பதை அகற்றவும், தூா்வாரவும் கோரிக்கை வைத்தனா்.

பெரணம்பாக்கம், பால்வாா்த்துவென்றான் ஆகிய ஊராட்சிகளில் வனப் பகுதிக்கு அருகில் இருக்கும் நிலத்தில் உள்ள பயிா்களை மயில், காட்டுப்பன்றி

உள்ளிட்ட வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போளூா் அருகேயுள்ள தனியாா் சா்க்கரை ஆலையை அரசு ஏற்று நடத்த வேண்டும். நெல், மணிலா என விவசாயிகள் கொண்டுவரும் பொருள்களுக்கு சுங்க வரி வசூலிப்பதை மாவட்ட நிா்வாகம் தடுக்க நடவடிக்கை வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் பேசினா்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் செந்தில்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் தேவி மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT