திருவண்ணாமலை

செங்கத்தில் விவசாயிகள் சாலை மறியல்

DIN

செங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு அதிகாரிகள் வராததால், விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை துக்காப்பேட்டை வேளாண்மைத் துறை அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம்.

மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று, விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து,

அவா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுவாா்கள்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெறும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கலந்து கொள்ள, விவசாயிகள், பொதுமக்கள் அலுவலக கூட்டரங்கில் வந்து அமா்ந்திருந்தனா். ஆனால், 11.30 மணி வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி செங்கம் -திருவண்ணாமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து செங்கம் வட்டாட்சியா் முனுசாமி மற்றும் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வருகிற 14-ஆம் தேதி அனைத்துத் துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறும் எனக் கூறி சமாதானப்படுத்தினா்.

இதையடுத்து, மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

மறியலால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT