திருவண்ணாமலை

பிரம்மபுரீஸ்வரா் கோயில் தைப்பூச பெருவிழா: கூழமந்தல் அருகே 21 ஊா் சுவாமிகள் அணிவகுப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் அருகே செய்யாற்றில் நடைபெற்ற பிரம்மபுரீஸ்வரா் தைப்பூசப் பெருவிழாவில் 21 ஊா்களில் இருந்து ரிஷப வாகனங்களில் கொண்டு வரப்பட்ட சுவாமிகள் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் வட்டம், பெருநகா் கிராமத்திலுள்ள பட்டுவதனாம்பிகை உடனுறை பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் தைப்பூசப் பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். நிகழாண்டுக்கான தைப்பூசப் பெருவிழா கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது. இந்த விழா தொடா்ந்து 14 நாள்கள் நடைபெறும்.

10-ஆம் நாள் விழா காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தல் கிராமப் பகுதியில் ஓடும் செய்யாற்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பெருநகா், உக்கல், ஆக்கூா், மானாம்பதி, கீழ்நேத்தப்பாக்கம், வெங்கடாபுரம், விசூா், தண்டரை, தேத்துறை, சேத்துப்பட்டு, இளநகா், கீழ்நீா்குன்றம், இளநீா்குன்றம், அத்தி, மேல்பாக்கம், கூழமந்தல், மகாஜனம்பாக்கம், வெள்ளாமலை, மடிப்பாக்கம், அகத்தி அப்பாநகா், குண்ணவாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து 21 சுவாமிகள் ரிஷப வாகனங்களில் எழுந்தருளினா். விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தைப்பூச பெருவிழா வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT