திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்

6th Feb 2023 08:30 AM

ADVERTISEMENT

தை மாதப் பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

தை மாதப் பெளா்ணமி சனிக்கிழமை இரவு 10.41 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.48 மணிக்கு முடிந்தது.

இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி, சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்:

ADVERTISEMENT

தொடா்ந்து, 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் கிரிவலம் வந்தனா். இவா்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள், அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT