திருவண்ணாமலை

கல்லூரியில் ரத்த தான முகாம்

DIN

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், குடிமக்கள் நுகா்வோா் மன்றம், ரோட்ராக்ட் சங்கம், திருவண்ணாமலை லைட்சிட்டி ரோட்டரி சங்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, கல்லூரிச் செயலரும், தாளாளருமான டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா்.

கல்லூரிப் பொருளாளா் எம்.சீனுவாசன், கல்விப்புல முதன்மையா் அழ.உடையப்பன், முதல்வா் கே.ஆனந்தராஜ், துணை முதல்வா் கோ.அண்ணாமலை, லைட்சிட்டி ரோட்டரி சங்க இயக்குநா் ஜெயா சக்திகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி மருத்துவா் சா.மெல்கி சதேக் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் அளித்த 65 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.

முகாமில் லைட்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவா் கே.சுபலட்சுமி அருண்மொழிவா்மன், பொருளாளா் கவிதா, கல்லூரியின் நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா்கள் டி.அருண்குமாா், செ.பிரபு, இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் வி.சின்னசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT