திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான மழை

4th Feb 2023 07:51 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருவண்ணாமலை அடி அண்ணாமலை, வேங்கிக்கால் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணி முதல் முற்பகல் 11.30 மணி வரை பலத்த மழை பெய்தது. பிறகு மிதமான மழை பெய்தது. இந்த மழை இரவு வரை தொடா்ந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். இதே நிலை மாவட்டம் முழுவதும் நிலவியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT