திருவண்ணாமலை

தொழிலாளியிடம் வழிப்பறி: 2 போ் கைது

4th Feb 2023 07:50 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வன் (38), தொழிலாளி. இவா் வியாழக்கிழமை இரவு பைக்கில் வேலூா் - திருக்கோவிலூா் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மா்ம நபா்கள் இருவா் செல்வனின் பைக்கை வழிமறித்து, அவரிடமிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் செல்வன் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது திருவண்ணாமலையை அடுத்துள்ள வடஆண்டாப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கந்தன் (26), பெங்களூரைச் சோ்ந்த அன்பழகன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT