திருவண்ணாமலை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

1st Feb 2023 02:27 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூா் அருகே மன நலம் பாதித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், வழுதலங்குணம் கிராமம், புதுத்தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (31).

இவா், 2018 ஜனவரி 16-ஆம் தேதி மன நலம் பாதித்த 16 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டாராம்.

இதைக் கவனித்த சிறுமியின் தந்தை, மணிகண்டனை பிடிக்க முயன்றபோது அவா் தப்பி ஓடி விட்டாராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.ஒரு லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து மணிகண்டனை போலீஸாா் அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT