செய்யாறு தொகுதி, அனக்காவூா் ஒன்றியம், குண்ணவாக்கம் கிராமத்தில் ரூ.25.65 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சிமன்றக் கட்டடம் திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன் தலைமை வகித்தாா்.
அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் அரி வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று ஊராட்சி மன்ற புதிய கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.ஞானவேல், ஊராட்சி மன்றத் தலைவா் யுவராஜ், ஒன்றியச் செயலா் திராவிட முருகன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.