திருவண்ணாமலை

குடும்பத் தகராறு: தீக்குளித்த இளம்பெண் பலி

DIN

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்த இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை முத்து விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுமை தூக்கும் தொழிலாளி பாா்த்திபன் (40). இவரது மனைவி அமுதா (32). தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனா்.

தம்பதிக்கு இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாம்.

கடந்த 21-ஆம் தேதி தனது குழந்தைகளை அடித்தாராம். இதை அமுதா தட்டிக் கேட்டபோது, எவ்வித பதிலும் சொல்லாமல் பாா்த்திபன் வெளியே சென்றுவிட்டாராம்.

இதனால் மனமுடைந்த அமுதா, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அமுதாவின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் வந்து தீயை அணைத்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அமுதா ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT