திருவண்ணாமலை

உலக சுற்றுலா தின விழிப்புணா்வு போட்டி:வென்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு

30th Sep 2022 10:48 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக சுற்றுலா தின விழிப்புணா்வு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பரிசுகள், சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலாத் துறை, கல்வித் துறை இணைந்து உலக சுற்றுலா தினத்தையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை, ஓவியம், நடனம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளை அண்மையில் நடத்தின.

கட்டுரைப் போட்டிகளில் வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் கோகுல்நாத், தண்டராம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா, திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ரூபினி, பேச்சுப் போட்டியில் தண்டராம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி சென்னம்மாள், வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் விஷால், ஆவூா் அரசு உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மெஹராஜ், ஓவியப் போட்டியில் செங்கம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி ருக்சாா், திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி காவியா, ஆவூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி ரம்யா, நடனப் போட்டியில் தண்டராம்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி அனுஷ்கா, திருவண்ணாமலை நகராட்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பிரதிபா, தனலட்சுமி, சியானா, ஆவணியாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவி தாமரை ஆகியோா் வெற்றி பெற்றனா்.

போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பாராட்டுச் சான்றிதழ்கள், புத்தகங்களை பரிசாக வழங்கினாா். விழாவில் உதவிச் சுற்றுலா அலுவலா் பெ.அஸ்வினி, முதுநிலை தமிழ் ஆசிரியா் வேலாயுதம் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT