திருவண்ணாமலை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம் கட்ட பூமிபூஜை

30th Sep 2022 01:37 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த வழூரில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய ஆய்வகக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் இந்த புதிய ஆய்வக கட்டடம் கட்டப்பட உள்ளது.

நிகழ்ச்சிக்கு திமுக மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா்.

வந்தவாசி ஒன்றியத் தலைவா் ஜெயமணி ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் வரவேற்றாா்.

ADVERTISEMENT

தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் பூமிபூஜை மற்றும் கட்டடப் பணிகளை தொடக்கிவைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் சு.வி.மூா்த்தி, வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், திமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.பிரபு, சி.ஆா்.பெருமாள், வழூா் ஊராட்சி மன்றத் தலைவா் செல்வி தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT