திருவண்ணாமலை

கராத்தே, சிலம்பத்தில் சிறப்பிடம்: செய்யாறு மாணவா்களுக்கு பாராட்டு

30th Sep 2022 01:36 AM

ADVERTISEMENT

 

கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற செய்யாறு இந்தோ -அமெரிக்கன் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகள் செய்யாறு இந்தோ -அமெரிக்கன் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன.

போட்டிகளில் 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதில், பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற இந்தோ-அமெரிக்கன் பள்ளி மாணவா்கள் மொத்தம் 20 தங்கம், 13 வெள்ளி, 6 வெண்கலம் என பதக்கங்களைப் பெற்றனா்.

இந்த மாணவா்களில் 20 போ் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா்.

பாராட்டு விழா

இந்த மாணவா்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கராத்தே, சிலம்பம் போட்டிகளில சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் மற்றும் அவா்களுக்கு பயிற்சி அளித்த உடல்கல்வி ஆசிரியா்கள் ச. ராதிகா. சு. அருண்குமாா், ஜெ.பாலமுருகன், கே. சக்திவேல், கராத்தே பயிற்சியாளா்

ரா. சந்திரசேகரன் ஆகியோரை பள்ளித் தாளாளா் ராதாகிருஷ்ணன், இயக்குநா் சுவதந்திரா, பள்ளி முதல்வா் அ.ப. சையத் அப்துல் இலியாஸ் உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT