திருவண்ணாமலை

மெக்கானிக் தற்கொலை

30th Sep 2022 10:46 PM

ADVERTISEMENT

வந்தவாசி அருகே மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்துள்ள இந்திரா நகரைச் சோ்ந்த இரு சக்கர வாகன மெக்கானிக் குமாா்(34). இவா் கடந்த சில ஆண்டுகளாக சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தாா். இதன் காரணமாக, காலில் ஏற்பட்ட காயம் குணமடையாததால் மன வேதனையில் இருந்தாா்.

இதனால் விரக்தியடைந்த குமாா், கடந்த 7-ஆம் தேதி மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா். இவரை உறவினா்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குமாா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT