திருவண்ணாமலை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

30th Sep 2022 10:48 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

செங்கம் வட்டம், கிளையூா் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி கிருஷ்ணமூா்த்தி (43). இவா், கடந்த 2013 டிசம்பா் 21-ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து செங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கிருஷ்ணமூா்த்தியை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கிருஷ்ணமூா்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணமூா்த்தி அழைத்துச் செல்லப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT