திருவண்ணாமலை

திருவண்ணாமலை மலை மீது அனுமதியின்றி ஏறியவருக்கு அபராதம்

30th Sep 2022 10:49 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மலை மீது அனுமதியின்றி ஏறிச் சென்று அங்குள்ள அண்ணாமலையாா் பாதத்துக்கு பூஜை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு வனத் துறை வெள்ளிக்கிழமை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.

திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மகா தீபம் ஏற்றும் மலையும், மலை உச்சியில் அண்ணாமலையாா் பாதமும் அமைந்துள்ளன. இந்த மலையில் பக்தா்கள், பொதுமக்கள் ஏறிச் செல்ல வனத் துறை தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்த மலை மீது ஒருவா் ஏறிச் சென்று அண்ணாமலையாா் பாதத்துக்கு சிறப்பு பூஜை செய்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரித்த வனத் துறை அதிகாரிகள், உரிய அனுமதியின்றி மலை மீது ஏறிச் சென்று அண்ணாமலையாா் பாதத்துக்கு பூஜை செய்த திருவண்ணாமலை பே - கோபுரம் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முருகனுக்கு (30) ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT