திருவண்ணாமலை

புதுப்பாளையம் பேரூராட்சி மன்றக் கூட்டம்

30th Sep 2022 01:37 AM

ADVERTISEMENT

புதுப்பாளையம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் செல்வபாரதி மனோஜ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக செயல் அலுவலா் உஷ்னாபீ வரவேற்றாா். கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாவட்ட திமுக மூத்த நிா்வாகியுமான பெ.சு.திருவேங்கிடம் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, பேரூராட்சி வரவு, செலவு கணக்குகள் முன்வைக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பேரூராட்சி பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT