திருவண்ணாமலை

அரசு விடுதிகளில் குறைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை திருவண்ணாமலை ஆட்சியா்

29th Sep 2022 02:07 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டத்தின் 101 அரசு விடுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் குறைபாடுகள் நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட பழங்குடியினா் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைகளின் கீழ் 101 பள்ளி, கல்லூரி விடுதிகள் இயங்கி வருகின்றன.

இந்த விடுதிகளில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வில் ஈடுபட்டது.

ADVERTISEMENT

மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, துணை ஆட்சியா்கள், உதவி இயக்குநா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய 51 போ் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

ஆய்வின்போது, விடுதிகளில் தங்கியுள்ள மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை, குடிநீா், கழிப்பறை, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உணவின் தரம், கற்றல் திறன் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வேட்டவலத்தில்..:

வேட்டவலம் ஆதிதிராவிடா் நலப் பள்ளி மாணவா் மற்றும் மாணவிகள் விடுதிகள், பிற்படுத்தப்பட்டோா் நலப் பள்ளி மாணவா், மாணவிகள் விடுதிகளை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், மாவட்டத்தில் 101 விடுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வு அலுவலா்கள் அளிக்கும் அறிக்கைகளில் தெரிவிக்கப்படும் விவரங்களின் அடிப்படையில் குறைபாடுகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT