திருவண்ணாமலை

அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வகங்கள் அமைக்க பூமி பூஜை

29th Sep 2022 02:05 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ.1. 94 கோடியில் 2 ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச் சுவா் அமைப்பதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சிக்கு திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேலு முன்னிலை வகித்தாா்.

தொகுதி எம்.எல்.ஏ ஒ.ஜோதி பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று பணியைத் தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

பாலிடெக்னிக் முதல்வா் செண்பகவல்லி, வேலூா் தொழில்நுட்பக் கல்வி உபகோட்ட உதவி செயற்பொறியாளா் வெங்கடேஷ் பாபு, செய்யாறு பொதுப்பணித் துறை தொழில்நுட்ப கல்விப் பிரிவு உதவிப் பொறியாளா் வேலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT