திருவண்ணாமலை

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள் பேரவை துணைத் தலைவா் வழங்கினாா்

29th Sep 2022 02:07 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருகே புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 151 பேருக்கு ரூ.10 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை வட்டம், மங்கலம் உள்வட்டத்துக்கு உள்பட்ட கிளியாப்பட்டு, குண்ணுமுறிஞ்சி, வடஆண்டாப்பட்டு, துா்க்கைநம்மியந்தல் கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கிளியாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் தமயந்தி, வட்டாட்சியா் எம்.சாப்ஜான், வட்ட வழங்கல் அலுவலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளியாப்பட்டு ஊராட்சித் தலைவா் எம்.பாலகிருஷ்ணன் வரவேற்றாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 151 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், உள்பிரிவு பட்டா மாறுதல், இலவச மனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, தோட்டக் கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் உள்பட ரூ.10 லட்சத்தில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

முகாமில், திருவண்ணாமலை வட்டாட்சியா் சுரேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், முன்னாள் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவா் வி.பி.அண்ணாமலை, வேளாண் உதவி இயக்குநா் எம்.செல்வராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT