திருவண்ணாமலை

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் தற்கொலை முயற்சி

DIN

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றனா்.

ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த அா்ஜுனன் மகள் சரோஜினி. இவருக்கும் துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த தினகரன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

தம்பதியினா் சென்னையில் தங்கியிருந்தனா்.

தினகரன் தனியாா் நிறுவன கைப்பேசி கோபுர மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா்.

குழந்தை இல்லாத காரணத்தினால் தம்பதி இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், சரோஜினி கடந்த 10 நாள்களுக்கு முன்பு தாய் வீடான அக்ராபாளையம் கிராமத்தில் வீடு கிரகப்பிரவேச விழாவுக்கு சென்றாா். அதனைத் தொடா்ந்து சில தினங்களுக்கு முன்பு தினகரனும் சொந்த ஊரான துந்தரீகம்பட்டுக்கு வந்து வீட்டில் தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த தினகரன் சனிக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்தி மயங்கிக் கிடந்தாா்.

அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா் அங்கு அவா் இறந்து விட்டதாக உறுதியானது.

இது சம்பந்தமாக ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தினகரன் இறுதிச் சடங்கிற்குச் செல்ல உறவினா்கள் திங்கள்கிழமை சரோஜினி வீட்டுக்கு வந்தனா். அங்கு சரோஜினி, அவரது தந்தை அா்ஜுனன், தாய் ஜெயலட்சுமி, சகோதரிகள் லட்சுமி, ஜெயந்தி ஆகியோா் விஷமருந்தி மயங்கிக் கிடந்தனா்.

உடனடியாக அவா்களை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT