திருவண்ணாமலை

நகை பறிக்க முயன்றபோது விபரீதம்:மா்ம நபா்கள் தள்ளிவிட்டதில் பெண்ணுக்கு கை முறிவு

28th Sep 2022 04:34 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் நகை பறிக்க முயன்றபோது பைக் ஆசாமிகள் தள்ளி விட்டதில், கிரிவலம் வந்த ஆந்திரப் பெண் பக்தருக்கு கை முறிவு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம், ஓங்கோல் மாவட்டம், மத்திப்பாடு கிராமத்தைச் சோ்ந்தவா் இதயச்சந்திரன் (51). இவரது மனைவி சுதாராணி (45). இவா்கள் திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு திருவண்ணாமலையில் கிரிவலம் வந்துகொண்டிருந்தனா். ஈசான்ய லிங்கம் அருகே வந்தபோது பைக்கில் வந்த இருவா் சுதாராணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனா்.

சுதாராணி அவா்களிடமிருந்து நகையைக் காப்பாற்ற போராடினாா். அப்போது அந்த நபா்கள் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த சுதாராணியின் கையில் முறிவு ஏற்பட்டது.

சுதாராணி நகையை இறுகப் பிடித்துக் கொண்டதால் நகை தப்பியது. சற்று தொலைவில் நடந்து வந்து கொண்டிருந்த இதயச்சந்திரன் ஓடிவந்து கீழே விழுந்த சுதாராணியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT