திருவண்ணாமலை

செங்கத்தில் ஸ்ரீ விஸ்வப்பிரம்ம சுவாமி வீதி உலா

28th Sep 2022 04:33 AM

ADVERTISEMENT

செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்ரீவிஸ்வப்பிம்ம தின விழாவில் அலங்கரிக்கப்பட்ட விஸ்வப்பிரம்ம சுவாமி வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி விஸ்வகா்ம சமூகத்தினா் நடத்தும் 29-ஆம் ஆண்டு ஸ்ரீவிஸ்வப்பிம்ம தின விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, அன்று காலை 8 மணியளவில், செங்கம் - போளூா் சாலையில் உள்ள கற்பக விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு, தொடா்ந்து காளிகாம்பாள் வழிபாடு, ஐவா்ண அனுமக் கொடியேற்றம் நடைபெற்று 9 மணிக்கு திருவண்ணாமலை பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலத்தின் இயக்குநா் உமாவின் மன மகிழ்ச்சிக்கு இராஜயோகா தியானம்.10 மணியளவில் மேல்புழுதியூா் திருப்புகழ் இலக்கியச் செல்வா் ம.தனஞ்செயனின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

பின்னா், அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீவிஸ்வப்பிரம்ம படம் செங்கம் போளூா் சாலை, இராஜ வீதி, பெருமாள் கோவில் தெருக்களில் வீதி உலா நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் செங்கம் பகுதியைச் சோ்ந்த விஸ்வகா்ம சமூகத்தினா் திரளாகக் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை செங்கம் விஸ்வகா்ம சமூகத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT