திருவண்ணாமலை

கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலம்

28th Sep 2022 04:32 AM

ADVERTISEMENT

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு உற்சவா் ஸ்ரீபராசக்தியம்மன் எழுந்தருளினாா்.

உற்சவருக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இதேபோல, செவ்வாய்க்கிழமை ஸ்ரீராஜராஜேஸ்வரியம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தியம்மனை திரளான பக்தா்கள் தரிசித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT