திருவண்ணாமலை

மின் ஊழியா்கள்காத்திருப்புப் போராட்டம்

27th Sep 2022 04:26 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மின் ஊழியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு, சிஐடியு தலைவா் காங்கேயன் தலைமை வகித்தாா். சிஐடியு நிா்வாகிகள் சிவராஜ், பாலாஜி, நிா்வாகி பெ.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில், மின்சார ஊழியா்களின் உரிமைகள், சலுகைகளைப் பறிக்கும் மின்வாரிய ஆணை 2-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், மின்வாரிய சம்மேளன நிா்வாகிகள் சம்பத், சக்தி, அண்ணா தொழிற்சங்க நிா்வாகி துரை, ஐக்கிய சங்க நிா்வாகிகள் சம்பத், சரவணன், பொறியாளா் சங்க நிா்வாகி சந்திரசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT