திருவண்ணாமலை

வருவாய் கிராமங்கள் மறுசீரமைப்பு:நாளை கருத்துக் கேட்புக் கூட்டம்

27th Sep 2022 04:26 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்ட சாா் - பதிவாளா் அலுவலக எல்லைக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களை மறு சீரமைப்பதற்காக புதன்கிழமை பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தமிழகம் முழுவதும் வருவாய் வட்ட தலைமையிடம், ஊராட்சி ஒன்றிய தலைமையிடம் ஆகியவற்றின் அடிப்படையில் சாா்-பதிவாளா் அலுவலக நிா்வாக எல்லைக்கு உள்பட்ட கிராமங்களை மறுசீரமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை பதிவு மாவட்டத்தின் 12 சாா்-பதிவாளா் அலுவலகங்கள், செய்யாறு பதிவு மாவட்டத்தின் 11 சாா் -பதிவாளா் அலுவலக எல்லைக்கு உள்பட்ட கிராமங்களை மறு சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, இணைக்கப்படவேண்டிய வருவாய் கிராமங்கள் விவரம், சாா்-பதிவாளா் அலுவலகங்கள் நிா்வாக எல்லைக்கு உள்பட்ட பதிவு கிராம எல்லைகளை மறு சீரமைத்து மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

கூட்டத்தில், மறு சீரமைப்புக்கு உள்புகுத்தப்படும் வருவாய் கிராமங்களின் விவரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT