திருவண்ணாமலை

புரட்டாசி அமாவாசை பூஜை

27th Sep 2022 04:28 AM

ADVERTISEMENT

 

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் புரட்டாசி மாத அமாவாசை பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அன்று காலை மூலவா் அம்மனுக்கு அபிஷேகம், துளசி மாலை சாற்றி தீபாராதனை நடைபெற்றது. அம்மன் திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிற்பகலில் கோயில் வளாகத்தில் ஸ்ரீசுதா்சன மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. பின்னா் இரவு உற்சவா் அம்மனுக்கு ராஜநா்த்தன மாகாளி அலங்காரம் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் சுவாமி உலா, ஊஞ்சல் தாலாட்டு ஆகியவை நடைபெற்றன.

ADVERTISEMENT

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT