திருவண்ணாமலை

அடுப்பில்லாமல் உணவுப்பொருள் தயாரித்தல் போட்டி

27th Sep 2022 04:27 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அடுப்பில்லாமல் ஊட்டச்சத்து உணவுப்பொருள் தயாரித்தல் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி தலைமை வகித்தாா். கல்லூரி நிறுவனா் பி.முனிரத்தினம் போட்டியைத் தொடக்கிவைத்தாா்.

இதில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் அடுப்பில் சமைக்காமல் பல்வேறு ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருள்களை தயாரித்து பாா்வைக்கு வைத்தனா்.

ADVERTISEMENT

அவற்றை பாா்வையிட்ட கல்லூரிச் செயலா் எம்.ரமணன், சிறப்பாக உணவு தயாரித்திருந்த மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினாா்.

கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் சத்துணவியல் சங்க ஒருங்கிணைப்பாளா் இ.எழிலரசி, கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ.கலைவாணி, கல்லூரி பெண்கள் மேம்பாட்டு சங்க ஒருங்கிணைப்பாளா் மு.கலாராணி ஆகியோா் போட்டியை ஒருங்கிணைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT