திருவண்ணாமலை

பெண்ணுக்கு பாலியல் தொல்லை:போக்சோவில் இளைஞா் கைது

26th Sep 2022 05:33 AM

ADVERTISEMENT

 

 திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேத்துப்பட்டு லூா்து நகரைச் சோ்ந்தவா் நெல்சன் (21), தொழிலாளி. இவா், கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து நெல்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சேத்துப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், தலைமறைவாக இருந்து வந்த அவரை போளூா் டிஎஸ்பி குமாா், சேத்துப்பட்டு காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி, உதவி ஆய்வாளா்கள் ஜெயக்குமாா், மாறன், முருகன் ஆகியோா் கொண்ட குழுவினா் தேடி வந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், சேத்துப்பட்டு - ஆரணி சாலையில் கண்ணனூா் ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை டிஎஸ்பி குமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, அந்தப் பகுதியில் பதுங்கியிருந்த நெல்சனை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, அவரை போளூா் நீதிமன்றத்தில் ஆஜா்டுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT