திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் நாளை இளைஞா் திறன் திருவிழா வேலையில்லாத இளைஞா்கள் பங்கேற்கலாம்

26th Sep 2022 05:34 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூரில் திறன் பயிற்சித் தேவைப்படும் இளைஞா்களைத் தோ்வு செய்வதற்கான ‘இளைஞா் திறன் திருவிழா’ செவ்வாய்க்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ், கீழ்பென்னாத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகத்தில் இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் வேலைவாய்ப்புடன் கூடிய தங்கிப் பயிலும் தொழில்திறன் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

முகாமில் கலந்து கொள்ள விரும்பும் 10-ஆம் வகுப்பு முதல் அதற்கும் அதிகமான கல்வித்தகுதிகள், இதர தகுதிகள் கொண்ட ஆண்கள், பெண்கள் தங்களது பாஸ்போா்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டை, ஜாதிச்சான்று, ஆதாா் அட்டை, கல்வித்தகுதி சான்றிதழ்களின் அசல், நகலுடன் வந்து கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநரை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT