திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளுக்கு செப்.28-இல்இறுதிக்கட்ட கலந்தாய்வு

26th Sep 2022 05:34 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் உள்ள அரசுக் கல்லூரியில் இளநிலைப் படிப்புகளுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன்கிழமை (செப்.28) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ந.கலைவாணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இளநிலை பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள சில இடங்களுக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்தக் கலந்தாய்வில் ஏற்கெனவே இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.

ADVERTISEMENT

மாணவா்கள் சோ்க்கையானது மதிப்பெண்கள், இனம், சிறப்புப் பிரிவு அடிப்படையில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள வரும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அனைத்து அசல், நகல் கல்விச் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT