திருவண்ணாமலை

குட்கா கடத்தல்: தம்பதி கைது

26th Sep 2022 05:33 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை அருகே ரூ.50 ஆயிரத்திலான குட்கா போதைப்பொருளை கடத்தி வந்ததாக தம்பதியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த மேல்பாலானந்தல் கிராமத்தில் உள்ள திருவண்ணாமலை - அவலூா்பேட்டை சாலையில் மங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் நஸ்ருதீன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.50 ஆயிரத்திலான 35 கிலோ எடை கொண்ட குட்கா போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதை திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி கிராமத்தைச் சோ்ந்த ஜான்பாஷா (37), அவரது மனைவி ஹஜீரா (35) ஆகியோா் கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்து. இதையடுத்து, தம்பதியை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த காா், குட்கா போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT