திருவண்ணாமலை

கூலித் தொழிலாளி கொலை வழக்கு:மனைவி கைது

DIN

தண்டராம்பட்டு அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் ஏற்கெனவே இரு மகன்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தொழிலாளியின் மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், தானிப்பாடியை அடுத்த குபேரப்பட்டினம் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சகாதேவன் (57). இவரது மனைவி அன்னக்கிளி (47). தம்பதிக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

இளைய மகன் சக்திவேலுக்கு 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான ஒரே மாதத்தில் அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாா்.

எனவே, தனக்கு 2-ஆவது திருமணம் செய்து வையுங்கள் என்று பெற்றோரிடம் சக்திவேல் கேட்டு வந்தாராம். வியாழக்கிழமை (செப்.22) மாலை வழக்கம்போல தனக்கு திருமணம் செய்து வைப்பதுடன், உன் பெயரில் உள்ள சொத்தை எனது பெயருக்கு எழுதிக் கொடு என்று சக்திவேல் தனது தந்தை சகாதேவனிடம் கேட்டாராம். இதற்கு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு தான் உனக்குத் திருமணம் செய்ய முடியும் என்று சகாதேவன் கூறினாராம்.

இதையடுத்து மகன்கள் மணிகண்டன், சக்திவேல், தந்தை சகாதேவன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த மகன்கள் தந்தை சகாதேவனை மண்வெட்டி, அரிவாளால் வெட்டிக் கொன்றனராம்.

இதுகுறித்து தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து மகன்கள் மணிகண்டன் (28), சக்திவேல் (25) ஆகியோரை கைது செய்தனா்.

மனைவி கைது:

இந்தக் கொலையில் சகாதேவனின் மனைவி அன்னக்கிளிக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அன்னக்கிளியை (47) வெள்ளிக்கிழமை மாலை போலீஸாா் கைது செய்தனா். சகாதேவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடா்பு இருந்ததும், இதனால் குடும்பத்தை சரிவர கவனிக்காததால் ஆத்திரமடைந்து மனைவி, மகன்கள் சோ்ந்து இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அன்னக்கிளியை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT