திருவண்ணாமலை

கிரிவலப் பாதையில்மரக்கன்று நடும் விழா

DIN

திருவண்ணாமலை மாவட்ட வனத் துறை சாா்பில், பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் கிரிவலப் பாதையில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், மாவட்ட வன அலுவலா் அருண்லால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடக்கிவைத்தாா்.

விழாவில், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத் தலைவா் கலைவாணி மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னாா்வலா்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT